மு.க.ஸ்டாலின் சீனியர்களை வெளியேற்ற பிள்ளையார் சுழி போடுகிறார்- கே.பி.முனுசாமி

 
மு.க.ஸ்டாலின் சீனியர்களை வெளியேற்ற பிள்ளையார் சுழி போடுகிறார்- கே.பி.முனுசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை நேரடியாக பொது மேடையில் சொல்ல முடியாத காரணத்தால், நடிகர் ரஜினிகாந்தை வைத்து சீனியர்களை வெளியேற்ற பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் சொல்லியே ரஜினிகாந்த் பேசியுள்ளார் - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “2026 தேர்தலில் 4-வது இடத்திற்கு அதிமுக செல்லும் என்ற அண்ணாமலையின் கனவு பலிக்காது. 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. முன்னுக்கு பின் முரணாக பேசும் இந்த அண்ணாமலை ஒரு தற்குறி. ஒரு ஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. 

காலில் விழுந்து தவழ்ந்து பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் அற்றவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்த நிலையில் அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார். அவர் விரைவில் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை நேரடியாக பொது மேடையில் சொல்ல முடியாத காரணத்தால், நடிகர் ரஜினிகாந்தை வைத்து சீனியர்களை வெளியேற்ற பிள்ளையார் சுழியை போட்டுள்ளார். திமுகவில் சீனியர்களை ரஜினியை வைத்து அவமதிக்கிறார் ஸ்டாலின். சீனியர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற முதலமைச்சர் சொல்லியே ரஜினி பேசியிருக்கிறார். துரைமுருகன் போன்ற மூத்தவர்கள் வெளியேற வேண்டும் என ரஜினிகாந்தை பேச வைத்திருக்கிறார்கள்.” என்றார்.