‘4 சுவர்களுக்கு உள்ளேயே 2 ஆண்டு அரசியலை விஜய் முடித்துவிட்டார்’ - கே.பி.முனுசாமி

"திமுக, தவெக இடையேதான் போட்டி" என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு விஜய் இன்னும் மக்களையே சந்திக்கவில்லை என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி பதிலளித்தார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, “விஜய் இன்னும் மக்களை வெளிப்படையாக சந்திக்கவில்லை. நான்கு சுவற்றுக்குளேயே இரண்டாண்டுகால அரசியலை அவர் முடித்துவிட்டார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு திமுக - அதிமுக இடையே தான் போட்டி இருக்கும். விஜய்க்கு அரசியலில் எந்த அளவுக்கு அனுபவம் உள்ளது எனக் கூற முடியாது. அவர் மக்களை சந்திக்கவில்லை. நீண்டகாலமாக மனதில் இருக்கும் கோபத்தையும், வருத்தத்தையும் விஜய் வெளிப்படுத்தியுள்ளார். திமுகவை எதிர்த்து யார் களமாட வந்தாலும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். கொள்கை ரீதியாகவும், இணக்கமாக செயல்படும் கட்சிகளோடும் கூட்டணி வைத்து செயல்பட தயாராக உள்ளோம்.