திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய புளியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து விவசாயில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய புளியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவில் ஒரு பகுதியாக சாமி வீதியுலா நடைபெற்றது. சாமி சிலை அலங்கரிக்கப்பட்டு டிராக்டர் மீது வைக்கப்பட்டு ஊரில் பவனி வந்தது. இந்த நிலையில், திடீரென மின்சாரம் அந்த டிராக்டர் மீது பாய்ந்துள்ளது. இதனால் டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலை தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த டிராக்டர் ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டுள்ளார். இதில் விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


