கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு..

 
கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு..

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லக்கூடிய சாலையில் பழையபேட்டை என்னும் இடத்தில், ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன்  இயங்கி வந்தது.  இந்த குடோனில் சுமார் 15 இருக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்தன. இந்த பயங்கர வெடி விபத்தில் அருகில் இருந்த கடைகள் மற்றும்  3 வீடுகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர விபத்தில்  முதலில் குடோன் உரிமையாளர் ரவி, அவருடைய மனைவி ஜெயஸ்ரீ, மகள்  ரித்திகா, மகன்  ரித்தீஷ் ஆகிய நான்கு பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு..

10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார்.  தரைமட்டமாகியுள்ள வீடுகளின் இடிபாடுகளில் 5 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருந்த நிலையில்  அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் குடோனுக்கு அருகில் இருந்த, தடைமட்டமான ஹோட்டலின்  உரிமையாளர் ராஜேஸ்வரி என்பவரும், மேலும் ஒருவரும்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு,  எஸ்.பி.சரோஜ்குமார் தாகூர்,  எம்எல்ஏக்கள் மதியழகன், அசோக்குமர்  உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையில் உள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.