மின் வேலியை தொட்ட சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

 
krishnagiri krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே யானைகளுக்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியை தொட்ட 10 வயது சிறுமி  மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் ஊருக்கு வருவதை தடுப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையி, அந்த மின்சார வேளியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி எதிர்பாராத விதமாக அந்த மின்சார வேலியை தொட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது. காட்டு யானைகள் வராமல் தடுக்க வைக்கப்பட்டிருந்த மின் வேலியை தொட்டதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. 

உயிரிழந்த சிறுமியின் பெயர் திவ்யாஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமி திவ்யாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  காட்டு யானைகள் வராமல் தடுக்க வைக்கப்பட்டிருந்த மின் வேலியை தொட்டதால் சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.