கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை- என்.சி.சி விளக்கம்

 
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மேலும் ஒரு ஆசிரியை கைது.. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற என்.சி.சி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 12 வயதான 8ம் வகுப்பு பயிலும் சிறுமியை அதிகாலை மூன்று மணியளவில் பயிற்சியாளரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த மாணவி இது குறித்து பள்ளியின் ஆசிரியர்கள், முதல்வரிடம் கூறிய போது, இதை பெரிது படுத்த வேண்டாம் எனக்கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மாணவிக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் வேளையில், புகார் அளிக்கப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.சி.சி.  கூடுதல் துணை இயக்குனர் ராகவ்  விளக்கம் அளித்துள்ளார். அதில், “மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் என்.சி.சி-யை சேர்ந்த அதிகாரிகளுக்கோ, என்.சி.சி., பயிற்சி பெற்றவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை. கைது செய்யப்பட்ட நபருக்கு, என்.சி.சி-யுடன் எந்த விதமான தொடர்பும் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த விதமான என்.சி.சி. முகாமும் நடத்தப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.