என்சிசி முகாமில் மாணவி பாலியல் வன்கொடுமை- மாவட்ட ஆட்சியர் விளக்கம்

 
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பற்றி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மேலும் ஒரு ஆசிரியை கைது.. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற என்.சி.சி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 12 வயதான 8ம் வகுப்பு பயிலும் சிறுமியை அதிகாலை மூன்று மணியளவில் பயிற்சியாளரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த மாணவி இது குறித்து பள்ளியின் ஆசிரியர்கள், முதல்வரிடம் கூறிய போது, இதை பெரிது படுத்த வேண்டாம் எனக்கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மாணவிக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் வேளையில், புகார் அளிக்கப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பற்றி பேட்டியளித்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, “கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேரை கைது செய்துள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேறு எந்தெந்த பள்ளிகளில்  என்சிசி பெயரைப் பயன்படுத்தி போலி முகாம் நடத்தப்பட்டுள்ளது  என விசாரித்து வருகிறோம். பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க 1098 என்ற எண்ணை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.