கேரளா மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர் உம்மன் சாண்டி - கே.எஸ்.அழகிரி இரங்கல்!

 
Ks Azhagiri

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திரு. உம்மன் சாண்டி அவர்கள் இன்று உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். கேரளா மாணவர் சங்கத்தின் மூலம் தன் சிறுவயதிலேயே அரசியல் வாழ்க்கையை துவங்கி, தன் கடும் உழைப்பால் படிப்படியாக முன்னேறி இந்திய தேசிய காங்கிரசின் மூலம் கேரளா மாநிலத்தில் நான்கு முறை அமைச்சராகவும், இரண்டு முறை முதலமைச்சராகவும் மற்றும் எதிர்கட்சி தலைவராகவும், பணியாற்றி அதன் மூலம் பல்வேறு திட்டங்களை அளித்து கேரளா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

congress

கேரள சட்டமன்றத்தில் நீண்டகாலம் பணியாற்றியதற்காகவும், பொது சேவைக்காகவும் ஐக்கிய நாடுகள் சபையால் விருது பெற்ற பெருமைக்குரியவர். தான் சார்ந்த இயக்கத்திற்கும், கேரளா மக்களின் முன்னேற்றத்திற்கும் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர். ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களுடன் நெருங்கி பழகி அவர்களால் அன்பு பாராட்டப்பட்டவர். திரு. உம்மன் சாண்டி அவர்களின் இழப்பு கேரளா மக்களுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கதிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும், கேரளா மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.