அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதாவது, காங்கிரஸ் கட்சி மக்களுக்காக கட்சி நடத்தவில்லை, தேர்தலில் சீட் வாங்குவதற்காகவே கட்சி நடத்துவதாக கூறினார். கூட்டணி கட்சிகளுக்கு குறைவாகவே சீட் வழங்க வேண்டும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. இது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டால் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு இருக்காது. சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா காங்கிரசுக்கு பெற்று தாருங்கள் என நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். சென்னையில் போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளேன் . அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.