நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை- நடிகை குஷ்பு

 
kushboo sundar

நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை என நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Kushboo sundar: Kushboo's exit: Zero impact on the ground in Tamil Nadu,  says Congress - The Economic Times


விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று SIAA-GSICC கமிட்டி சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் தி.நகர், நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று (04.09.2024) காலை 11:30 மணியளவில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,“பொதுக்கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தீர்மானங்கள் வெளியிடப்படும். எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது, ஏன் சினிமாவை மட்டும் சொல்கிறார்கள். எல்லா துறைகளிலும் கமிட்டி தேவைப்படுகிறது என்று தான் சொல்லுவேன். நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை” எனக் கூறினார்.