குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

 
kutralam kutralam

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் அவ்வபோது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.