குவைத் தீ விபத்து - முதலமைச்சர் ஆலோசனை!

 
stalin stalin

குவைத் நாட்டில் மங்காப் நகரில் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். tttt

இந்நிலையில் குவைத் கட்டட தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடலூரைச் சேர்ந்த சின்னதுரை, பேராவூரணியைச் சேர்ந்த புனாப் ரிச்சர்ட் உள்ளிட்டோர் நிலை குறித்து தகவல் தெரியாததால் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

stalin

அயலகத் தமிழர் நலத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை  நடத்தி வருகிறார்.