தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் - எல்.முருகன் கண்டனம்
தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தெரிவித்தும் காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காதது ஏன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பல்லடம் நியூஸ்-7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையை தொடர்பு கொண்ட போது காவலர் ஒருவர் ஸ்டேஷன்ல ஆள் இல்லை.. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வருமாறு கூறியிருக்கிறார் ஒரு காவலர் இப்படி பேசலாமா அதுவும் ஒரு செய்தியாளர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்லியும் இப்படி செய்ததின் உள்நோக்கம் என்ன? போலி திராவிட மாடல் அரசில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும்?
பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாக தெரிவித்தும் காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காதது ஏன்?
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 25, 2024
பல்லடம் நியூஸ்-7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது;…
செய்தியாளர் நேசபிரபு மீது கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகையாளர் சகோதரருக்கு போதிய சிகிச்சை கொடுக்கவும் அவருக்கான இழப்பீடு வழங்கவும் இந்த போலி திராவிட மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.