திமுகவை மிரட்ட திருமாவளவன் உத்தி - எல்.முருகன்

 
l murugan press meet

திமுகவை மிரட்டும் உத்தியாக அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கலாம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கூட்டணியிலிருந்து வெளியேற திருமாவளவன் காத்திருக்கிறார்!" - எல்.முருகன்  சொல்வதென்ன? | L Murugan slams India Bloc in puducherry - Vikatan

விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து போத மக்கள் வைத்த கோரிக்கை மதுபான கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்துகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அதாவது திமுகவை மிரட்டும் உத்தியாக அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கலாம். திமுகவிற்கு திருமாவளவன் ஏதும் நிபந்தனை வைத்திருக்கலாம். நிபந்தனையை திமுக ஏற்காமல் இருந்திருக்கலாம். அதனால் மிரட்டும் தொனியாக இது இருக்கலாம். திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல” என்றார்.