கோவையில் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த தொழிலாளர்கள்: 10 மணிநேரத்திற்கு பிறகு சடலங்களாக மீட்பு - வானதி சீனிவாசன் இரங்கல்..!
கோவையில் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை அறிந்த பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கோவை, சாய்பாபா காலனி பகுதியில் நேற்று மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் இருவர், எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் நிலையத் உள்ள தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எத்தனையோ நவீன வசதிகள் வந்த பின்னரும் விடியா திமுக அரசு போதிய உபகரணங்கள் மற்றும் முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் கமிஷன், கலெக்ஷன், கரப்சன் என கல்லா கட்டுவதிலேயே குறியாக இருந்து அப்பாவி மக்களை பலிகடா ஆக்கிக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை, சாய்பாபா காலனி பகுதியில் நேற்று மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் இருவர், எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் நிலையத் உள்ள தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
— Vanathi Srinivasan (@VanathiBJP) April 4, 2026

