தலைமறைவான லட்சுமி மேனன்..!! ஐ.டி. ஊழியரிடம் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

 
தலைமறைவான லட்சுமி மேனன்..!!   ஐ.டி. ஊழியரிடம்  நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு..!! தலைமறைவான லட்சுமி மேனன்..!!   ஐ.டி. ஊழியரிடம்  நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு..!!


கேரளா மாநிலம்  எர்ணாகுளத்தில் மதுபான பாரில் நடந்த தகராறில் ஐடி ஊழியர் கடத்தி, தாக்கப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளார். 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பாரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில்  நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் , ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.  பாதிக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன், 2 ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண் தோழி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Image

குற்றம் சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம்  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்துள்ளது. அவரது வீட்டிற்கு சென்று போலீஸார் விசாரித்தபோது அவர் வீட்டிற்கும் வரவில்லை என தெரிவித்துள்ளது. இதனையடுத்து லட்சுமி மேனன்  தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ள எர்ணாகுளம் போலீஸார், வரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில்  பார்க்கு முன்பாக ஐ.டி.ஊழியரிடம் , லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.