கேரளாவில் வெடிவிபத்து எதிரொலி- தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

 
கேரளாவில் வெடிவிபத்து எதிரொலி- தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

கேரள மாநிலம் கொச்சியில் ஏற்பட்ட வெடி விபத்து எதிரொலியாக தமிழக எல்லைகள் பகுதியில் இருக்கக்கூடிய சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

Increase in corona exposure in Kerala: Intensity of surveillance along  Tamil Nadu borders | கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில்  கண்காணிப்பு தீவிரம்

கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் காயம் அடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக கேரளா எல்லை பகுதியான கூடலூரில் உள்ள கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புறம் மாவட்டத்தின் எல்லைகளான நாடுகாணி , தாளூர், பாட்டவயல் ,கக்குண்டி, புலக்குன்னு, சோலாடி, மணல்வயல்,கோட்டூர், மதுவந்தால் நம்பியார்குன்னு  போன்ற சோதனை சாவடியில் வழக்கமான சோதனை நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் புதியதாக பொதுப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேலு நேற்று முதல் எல்லையோர சோதனை சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களில் வழக்கமாக ஆய்வு  மேற்கொண்டார். இருந்த போதும்  மாவட்ட கண்காணிப்பாளரின் இந்த ஆய்வு  என்பது வழக்கமாக நடக்கும் ஆய்வு மட்டுமே, இருந்த போதும் கொச்சியில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக இந்த சோதனை தீவிரப் படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் முழு ஆய்வுக்கு பின்னரே  தமிழகப் பகுதிக்கு அனுமதிக்கப்படுகிறது.