மறைந்த மைத்துனர்.. வீடியோ காலில் பார்த்து அழுத மு.க.அழகிரி..

 
மறைந்த மைத்துனர்..  வீடியோ காலில் பார்த்து அழுத மு.க.அழகிரி..  

தங்கையின் கணவர் முரசொலி செல்வம் உடலை வீடியோ காலில் பார்த்து மு.க.அழகிரி தேம்பி தேம்பி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

திமுகவின் மூத்த நிர்வாகியும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று பெங்களூரில் மாரடைப்பால காலமானார். இவர் முன்னாள்  முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின்  சகோதரி மகனும், முரசொலி மாறனின் தம்பியும் ஆவார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோடின் சகோதரியான மு.க.செல்வியின் கணவரும் ஆவார்.  முரசொலி நாளிதழுடன் 50 ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்த முரசொலி செல்வம்  நேற்று முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. 

மறைந்த மைத்துனர்..  வீடியோ காலில் பார்த்து அழுத மு.க.அழகிரி..  

இதனையடுத்து அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதறி அழுதார். அதேபோல் வெளிநாட்டில் இருக்கும் மு.க.அழகிரி வீடியோ கால் வாயிலாக மைத்துனரின் உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுதார். மகன் துரை தயாநிதியின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருக்கும் அவர் வீடியோ கால் வாயிலாக கதறி அழுத காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.