மக்களுக்கு உதவ வழக்கறிஞர்கள் - விஜய் திட்டம்

 
vijay vijay

தமிழக வெற்றிக்  கழகம்  சார்பில் "இலவச சட்ட ஆலோசனை மையம்" செயல்பட்டு வருகிறது. முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்தில் இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, விவசாயி அணி , வர்த்தகர் அணி என பல அணிகள் இருக்கிறது. மாவட்டங்களுக்குள் பல அணிகள் பிரிக்கப்பட்டு இருந்தாலும், விஜய் மக்கள் இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் அணி வழக்கறிஞர் அணி.  vijay

அந்த வரிசையில் அங்கீகரிக்கப்பட்ட அணியான வழக்கறிஞர் அணியில் உள்ள வழக்கறிஞர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் சார்பாக யார் தவறு செய்தாலும்,  இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவர்.  நடிகர் விஜய்க்கு நேரம் கிடைக்கும்போது இந்த வழக்கறிஞர் அணியினரை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

court

இந்நிலையில் மக்களுக்கு சட்டஉதவி வழங்க காவல்நிலையங்களை கணக்கிட்டு தலா 2 வழக்கறிஞர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வரும் நிலையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு த.வெ.க வழக்கறிஞர்கள் சட்ட உதவிகளை வழங்குவார்கள்.  வழக்கறிஞர்கள் நியமனத்தை இந்த வாரத்திற்குள் முடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.