அன்புமணியை வாழ்த்திய தலைவர்கள்.. !

 
anbumani anbumani

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு பயணிக்கும் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

டிடிவி தினகரன் பன்னீர்செல்வம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் : “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்டநாள் வாழ்ந்து, பொதுமக்களுக்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.