நிச்சயம் அரசியலுக்கு வருவேன்- லெஜண்ட் சரவணன் பரபரப்பு பேட்டி
காலமும், சூழலும் சரியாக அமைந்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என நடிகர் லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லெஜண்ட் சரவணன், “அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எதார்த்தமாக நகைச்சுவை உணர்வுடன் பேசியிருந்தார். அதில் சில கருத்துகள் மத்திய அமைச்சருக்கு உடன்பாடு இல்லாததால் அவரை சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதில் பெரிதுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை.
— Amuthabharathi Videos (@videos890) September 14, 2024
எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக அமைந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டு வரும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன். கேரள உயர் நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உயர் நீதிமன்றம் தக்க உத்தரவு பிறப்பிக்கும் என நம்புகிறேன். அமெரிக்கா சென்று திரும்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என்றார்.