சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!
Feb 12, 2024, 09:35 IST1707710703819
ஆளுநரின் உரையுடன் தொடங்கும் கூட்டத்தொடர் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள் டிடி தமிழ் நியூஸ் மூலம் நேரடி ஒளிபரப்பாகிறது.
இதைத்தொடா்ந்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடுகிறது. வரும் 19-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.