#BREAKING லியோ - அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி வழக்கு

 
tn

லியோ திரைப்படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ம் தேதி உலகம் முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாக உள்ளது. பண்டிகை காலம் என்பதால் அதிகாலை நான்கு மற்றும் ஏழு மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் மூலம் வருவாய் துறைக்கு  கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த அரசு தரப்பு, படம் வெளியாகும் நாளிலிருந்து தொடர் 5 நாட்களுக்கு ஒரே ஒரு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி வழங்குவதாக அரசாணை வெளியிட்டது. அதில் அக்டோபர் 19 முதல் 24 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ஒரு சிறப்புக் காட்சிகள் வீதம் நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திடீரென லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசிக் காட்சி நள்ளிரவு 1.30 மணி வரை திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது

லண்டன் பேருந்துகளில் லியோ விஜய் போஸ்டர்... அனல் பறக்கும் புரமோஷன்...

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு காலை 4 மணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் செவன் கிரீன் ஸ்டுடியோ முறையீடு செய்துள்ளது.  இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மதியம் ஒரு மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார்.