4 வயது சிறுவனை கடித்து இழுத்துச்செல்ல முயன்ற சிறுத்தை .. வால்பாறை அருகே பரபரப்பு..!!

 
சிறுத்தை சிறுத்தை

வால்பாறை  அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில் குடிலில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை புலி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வால்பாறை அடுத்துள்ள  கேரள எல்லைக்கு உட்பட்ட மழுக்க பாறை என்னும் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.  மழுக்கப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிரப்பிள்ளி பஞ்சாயத்து, வீரன் குடி மலைப்பகுதியில் அமைந்துள்ள தார்பாயால் மூடப்பட்டிருந்த குடிலில்  பேபி என்பவரது 4 வயது சிறுவன் ராகுல், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். அதிகாலை 2.15 மணியளவில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனின் தலையைக் கவ்விக்கொண்டு சிறுத்தை ஒன்று இழுத்துச்செல்ல முயன்றது. சிறுவனை சிறுத்தை இழுத்துச் செல்லும் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் கூச்சலிட்டுள்ளனர்.  சட்டதம் கேட்ட உடனேயே சிறுவனை அப்படியே போட்டுவிட்டு, சிறுத்தை காட்டுக்குள் தப்பியோடியுள்ளது.  

4 வயது சிறுவனை கடித்து இழுத்துச்செல்ல முயன்ற சிறுத்தை .. வால்பாறை அருகே பரபரப்பு..!!

குடும்பத்தினர் உடனடியாக மலக்கப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், இன்ஸ்பெக்டர் சஜீஷ் H.L, சப் இன்ஸ்பெக்டர் தாஜுதீன், சிவில் போலீஸ் அதிகாரி அகில், மற்றும் டிரைவர் C.P.O. பிஜு ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர். காயமடைந்த சிறுவன் உடனடியாக மலக்கப்பாறை டாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் சாலக்குடி தாலுக்கா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

வனம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவத்தை விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வன எல்லைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.