“குடும்ப ஆட்சி நீக்கி, மக்கள் நலன்போற்றும் நல்லாட்சி அமைந்திட உறுதியேற்போம்” - இபிஎஸ், விஜய் சுதந்திர தின வாழ்த்து..!!

 
கூட்டணிக்கு அழைத்த பழனிசாமி..  திட்டவட்டமாக மறுத்த தவெக..!!  கூட்டணிக்கு அழைத்த பழனிசாமி..  திட்டவட்டமாக மறுத்த தவெக..!! 


79வது  சுதந்திர தினத்தையொட்டி  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

அதிமுகம் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், 

நம் தாய்திரு நாடு விடுதலை பெற,போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு, நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும், மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும், இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம்... வாழிய பாரத மணித்திரு நாடு ” என்று தெரிவித்துள்ளார்.  

சுதந்திர தினம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் : “மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம்  அமைய வழிவகுக்கும், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் , நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள். இத்திருநாளில் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தை போற்றி வணங்குவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.