பெரியாரின் சமூகநீதி பாதையில் பயனிக்க உறுதியேற்போம் - தவெக தலைவர் விஜய்..

 
vijay

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.  

தந்தை பெரியாரின்  146வது பிறந்தநாள் செப்டம்பர் 17ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.  முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம்தேதி சட்டசபையில், தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் “சமூகநீதி நாளாக” கடைபிடிக்கப்படும் என்றும்  சமூக நீதி நாளில்  “சமூகநீதி நாள் உறுதிமொழியேற்க வேண்டும்”  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அதன்பின்னர் பெரியாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் “சமூகநீதி நாளாக” கடைபிடிக்கப்படுகிறது. 

சிறப்புக்கட்டுரை: பெரியார் – வரையறுக்க இயலாத சகாப்தம்

இந்நிலையில் பெரியார் பிறந்தநாளையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.  இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களை பகுத்தறிவு மனப்பாண்மையுடன் போராடத் தூண்டியவர்;  சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவர்  வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!.” என்று குறிப்பிட்டுள்ளார்.