"போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்" - ஈபிஎஸ் ட்வீட்

 
ep

போதை பொருள் சமூகத்தை ஒழிக்கும் பெரும் நோயாக மாறி உள்ளது.  அனைத்து வகையான நோய்களுக்கும் போதைப்பொருள் என்பது முன்னோடியாக உள்ளது . போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்று நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுக்கும் தினம்கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

drugs

போதைப் பொருட்களை பயன்படுத்துதல், போதை பொருட்களை கடத்துதல், போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக பல இடங்களில் இன்று போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  போதை பொருள் பயன்படுத்தி  தங்களை சார்ந்து இருக்கும் குடும்பத்தையும் இளைஞர்கள் பலர் தற்போது சீரழித்து வருகின்றனர். ஆனால் போதை பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவிற்கு போதை பொருட்களுக்கு அடிமையாக உள்ள நிலையில் இது குறித்து விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை இளைஞர்கள் மட்டுமல்லாமல்  பள்ளி மாணவர்களுக்கும் போதிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டில் பெருவாரியான குற்றச் சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, நம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்;

வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல்,  நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம். என்று பதிவிட்டுள்ளார்.