முதல்வர் ஸ்டாலினுக்கு ‘Go Back சொல்வோம்’ - அண்ணாமலை பேட்டி!!

 
Annamalai

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் மீண்டும் மேகதாது விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.  கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் மத்திய நீர் வழித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20ம் தேதி எழுதிய கடிதத்தில்,  காவிரியின் குறுக்கே மேகதாது அணை  கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

விவாதிக்காதே, வஞ்சிக்காதே, தமிழர்களை அவமானப்படுத்தாதே! -வெடித்த சமூகவலைத்தள பரப்புரை  #TNRejectsMekadatuAgenda

தமிழ்நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ள பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்ட விரோதமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் , இத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மற்றும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழலில் மேகதாது விவகாரம் குறித்து இன்று முதல்வர் மு.க.  ஸ்டாலின்  ஆலோசனை நடத்துகிறார்.

Annamalai

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா அரசையும்,  டி .கே சிவகுமாரையும் கண்டிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனம் இல்லை.  மேகதாது விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் கர்நாடகாவிற்கு முதல்வர் சென்றால் போராட்டம் நடத்துவோம் . கோ பேக் ஸ்டாலின் என்று சொல்வோம்.  காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை என்று கூறினார்.