"கோபாலபுரம் குடும்பம் ஜெயிலுக்கு போகும்..." அண்ணாமலை
Apr 11, 2024, 12:23 IST1712818382726
ஜூன் 4ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம் என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் நடத்தியது ரோடு ஷோ அல்ல மக்கள் தரிசன யாத்திரை . எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?; யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கே தெரியும் பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தினால் கூட்டம் வராது. 2024 தேர்தலுக்குப் பிறகு கோபாலபுரம் குடும்பம் சிறையில் இருப்பார்கள்.

தமிழகத்தில் பிரிவினை பேசும் சக்திகளை மோடி அடக்குவார் வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை; தமிழகத்தில் இன்னும் இரட்டை குவளை உள்ளது. ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை ஸ்டாலின் என்று வைத்தால் அதில் வேந்தராக மோடி இருப்பார்; பல்கலை.யில் நடக்கும் பிரச்னைகளை வேந்தர்கள்தான் வெளிக்கொண்டு வருவார்கள் என்றார்.


