சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, கலாச்சாரத்தை வணங்குவோம் - நயினார் நாகேந்திரன்..!
Nov 7, 2025, 12:23 IST1762498428252
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஊக்கமளித்து நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும் தூண்டிய வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. 1875-ஆம் ஆண்டு நவம்பர் 7-ல் அட்சய நவமி நாளில், வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்த பாடல் , சுதந்திரப் போராட்டத்தின் போது ஒட்டுமொத்த இந்தியர்களின் மனங்களில் வீரத்தை விதைக்கும் வண்ணம் அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நாளில் சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை நினைவு கூர்ந்து வணங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வந்தே மாதரம் பாடல் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும், இந்தியராகிய நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று இன்றுவரை நமக்கு உணர்த்துகிறது. இந்த நாளில் நமது இந்திய தேசத்தின் மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று மனமகிழ்வு அடையட்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஊக்கமளித்து நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும் தூண்டிய வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
— Nainar Nagenthran (@NainarBJP) November 7, 2025
1875-ஆம் ஆண்டு நவம்பர் 7-ல் அட்சய நவமி நாளில், வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்த பாடல் , சுதந்திரப்… pic.twitter.com/XlEad80sqO


