வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்! பரபரப்பில் சென்னை
Oct 5, 2025, 11:01 IST1759642298425
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 'லயன் சபாரி' பகுதியில் திறந்துவிடப்பட்ட 'சேரு' என்ற புதிய சிங்கம் மாயமானது.

சபாரி பகுதியில் திறந்து விடப்பட்ட புதிய சிங்கம் மீண்டும் உணவு உட்கொள்ள வராததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிங்கத்தை கடந்த 2 நாட்களாக பூங்கா அதிகாரிகள் தேடி வந்த நிலையில், 'லயன் சபாரி' பகுதியில் சுற்றித்திரிவது தெரிய வந்துள்ளது. மாயமான சிங்கம் பூங்காவில் உள்ள 'லயன் சபாரி' பகுதியில்தான் இருப்பதாகவும், வெளியே செல்லவில்லை எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 'லயன் சபாரி' பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சிங்கம் வெளியேற வாய்ப்பு இல்லை என பூங்கா அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


