பிரியாணியில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி- 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கொருக்குப்பேட்டையில் ஹோட்டலில் பார்சல் வாங்கிய பிரியாணியில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஸ்மி என்கின்ற உணவகத்தில் சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி சென்றுள்ளார். குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த பிரியாணியை பகிர்ந்து கொண்டுள்ளனர். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராஜ்குமாரின் மனைவி சுவாதி மற்றும் இரண்டு மகன்கள் வாந்தி எடுத்துள்ளனர். உடனே பிரியாணியை சோதனை செய்து பார்த்தபோது பிரியாணியில் இறந்த நிலையில், பல்லி ஒன்று இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து ராஜ்குமார், அவரது மனைவி சுவாதி, இரண்டு மகன்கள், ராஜ்குமாரின் தாயார் ஜெயந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.