10 லட்சம் கோடிக்கும் அதிகமாக தமிழக அரசின் கடனை மாற்றியது தான் ஒரே சாதனை- எல்.முருகன்
திமுக மன்னர் குடும்பத்தின் புகழ்பாடும் தமிழக நிதியமைச்சருக்கு மக்களை பற்றி ஏது கவலை..? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறியிருக்கிறார். இதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? அந்த பணம் முழுவதும்எங்கே சென்றது?எந்த வளர்ச்சி பணியும் செய்யாமல், மக்களின் குரலுக்கு செவி சாய்க்காத திமுக அரசு செய்த ஒரே சாதனை, கடன் வாங்கி குவித்து தமிழகத்தை படுகுழியில் தள்ளியது மட்டும் தான்.
மத்திய அரசின் திட்டங்களையும் செயல்படுத்தாமல் மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்தி 5 ஆண்டு காலத்தையும் திமுக அரசு கடத்தி விட்டது!இந்த கொடூர திமுக அரசை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்குவது தான் இந்த அரசுக்கு மக்கள் அளிக்கும் தண்டனையாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

