உள்ளாட்சி தேர்தல்- 4வது இடம் பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

 
protest

கிராம வார்டு உறுப்பினர் பதவியில் நான்காம் இடம் பிடித்தவரை வெற்றி பெற்றதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

Protest

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்யாணம்பூண்டி கிராம ஊராட்சியில் 6 வது வார்டில் வார்டு உறுப்பினர் பதவிக்கு செல்வி சீப்பு சின்னத்திலும், ஐஸ்வர்யா கார் சின்னத்திலும் போட்டியிட்டனர். அவர்களுடன் மேலும் இருவர் போட்டியிட்டனர். இதில் செல்வி  84 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளனர். சான்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று மாலை வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்காமல், நான்காம் இடம் பிடித்து 58 வாக்குகள் பெற்ற ஐஸ்வர்யா வெற்றி பெற்றதாக சான்று வழங்கி உள்ளதாக தெரிகிறது. முறைகேடாக மாற்றி  சான்று வழங்கியதாக கூறி செல்வி  தரப்பினர் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ரீ கவுண்டிங் செய்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.