டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

 
kanyakumari

 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 4-ம் தேதிஉள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

tnt

புனித சவேரியார் பேராலயம் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதன்மை கத்தோலிக்க ஆலயமாகும். கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இது விளங்குகின்றது. 1544 இல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறித்தவ மதத்தை பரப்ப வந்த புனித சவேரியாரால் இவ்வாலயம் சிறிய அளவில் நிறுவப்பட்டது. இன்று இது விரிவடைந்து பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் பூதஉடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பப்படுவதால் இவ்வாலயத்தை பொதுமக்கள் கேட்ட வரம் தரும் கோட்டாறு சவேரியார் என்று அழைக்கின்றனர். இவ் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24ம் தேதி முதல்  10 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. இத் திருவிழாவின் இறுதி நாளன்று கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுவருகின்றது.

local holiday

இந்நிலையில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக டிசம்பர் 16-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளது.