ஆட்சியமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை இல்லை- ஆளுநர் மாளிகை
May 7, 2026, 15:18 IST1778147290944
ஆளுநரை 2 முறை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், “போதிய பெரும்பான்மை இல்லை” என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் ராஜே்ந்திர விஷ்வநாத் அர்லேகர்,தவெக தலைவர் ஜோசப் விஜயை சென்னை லோக் பவனுக்கு அழைத்திருந்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் அரசு அமைப்பதற்கு தேவையான சட்டப்பேரவை பெரும்பான்மை ஆதரவு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை ஆளுநர் அவரிடம் கூறினார். ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை, பெரும்பான்மை பலம் விஜய்யிடம் இல்லாததால் அதை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சி அமைக்க அழைக்க முடியும். த.வெ.க ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது.

