#BREAKING சிலிண்டர் விலை 500ஆக குறைக்கப்படும் திமுகவின் தேர்தல் அறிக்கை!!

 
tn

மக்களவைத் தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் . சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசிய போது,  “திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக உள்ளது; பாஜக கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  அரசு நிறைவேற்றவில்லை;இனியும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லது இல்லை;மாநிலங்களை அனுசரித்து செல்லும் அரசு மத்தியில் அமைய வேண்டும்; இந்திய அரசியல் சாசன அமைப்பு சட்டத்தை காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்” என்றார் .

tn

திமுகவின் தேர்தல் அறிக்கை

மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.

ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.

 சிலிண்டர் விலை 500ஆக குறைக்கப்படும் 

ஈழ தமிழருக்கு குடியுரிமை

நாடுமுழுவதும் காலை உணவு திட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு

GST திருத்தம்

இந்தியா முழுவதும் கல்வி கடன் ரத்து

பொது சிவில் சட்டம் ரத்து