நட்சத்திர தொகுதியாக மாறிய விருதுநகர் - வெற்றி பெற போவது யார்?

 
tn

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்,  பாஜக சார்பில் நடிகை  ராதிகா,  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் களம் காண்கின்றனர்.  2009,  2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் மீண்டும் விருதுநகரில் களமிறங்கியுள்ளார்.

தேமுதிகவின் நிறுவனரும்,  நடிகருமான விஜயகாந்தின் மகன் என்ற அடையாளத்தோடு களம் இறங்கியுள்ளார் விஜய பிரபாகரன்.  அதிமுகவின் கூட்டணியுடன் களமிறங்கியுள்ள தேமுதிக  தீவிரமான பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகிறது. காலையில் நடை பயிற்சி செல்வது , தேனீர் அருந்துவது என மக்களுடன் மக்களாக கலந்து அவர் தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். விஜயகாந்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் இத்தொகுதிக்குள் வருவதால் கூடுதல் உற்சாகத்தோடு அவர் வாக்கு சேகரித்து வருவதாக தெரிகிறது.

virudhunagar ttn

 அதே சமயம் பாஜக சார்பில் போட்டிடும் நடிகை ராதிகா அனைவருக்கும் பரீட்சயப்பட்ட நபர்.  எனவே ராதிகா பல்வேறு சமூகத்தின் தலைவர்களை சந்தித்தும் நிர்வாகிகளை அணுகியும் தனது வாக்கு சேகரிப்பினை தீவிரமாக நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக அவரது கணவர் சரத்குமார் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் போட்டியிட்டுள்ளார். ராதிகா விஜய பிரபாகரன் உள்ளிட்டோரின் போட்டியினால் விருதுநகர் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. ஏற்கனவே 2 முறை வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் களத்தில் உள்ள நிலையில் விருதுநகரில் வெற்றி பெறுபவர் யார் என்று எதிர்பார்ப்பு பெருமளவில் எழுந்துள்ளது.