திமுக வேட்பாளர் பட்டியல் : 11 புதுமுகங்கள் யார் யார்?

 
arivalayam

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

tn

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது திமுக. எஞ்சிய தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர்.  இதற்கான பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். 

இந்நிலையில் மக்களைவை தேர்தலில் திமுக சார்பில் 11 புதுமுக வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். 

  1. தருமபுரி - வழக்கறிஞர் மணி 
  2. ஆரணி - தரணி வேந்தன் 
  3. சேலம் - டி எம் செல்வகணபதி
  4.  ஈரோடு - பிரகாஷ் 
  5. கோவை - கணபதி பி ராஜ்குமார் 
  6. பொள்ளாச்சி ஈஸ்வரசாமி 
  7. பெரம்பலூர் அருண் நேரு 
  8. தஞ்சாவூர் -  முரசொலி
  9.  தேனி - தங்க தமிழ்ச்செல்வன் 
  10. தென்காசி தனித்தொகுதி -  டாக்டர் ராணி
  11. கள்ளக்குறிச்சி - மலையரசன்