புத்தம் புதிய பாலத்தின் நிலையை பாருங்க..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
சென்னை புறநகர் பகுதியில், புதிதாக கட்டப்பட்டு திறந்து 3 மாதங்களேயான, புத்தம் புதிய படப்பை மேம்பாலம், ஆங்காங்கே விரிசலை கண்டுள்ளது. ரூ.26 கோடி கொட்டி, 3 ஆண்டுகளாக மேம்பால பணிகள் நடைபெற்றன. கடந்த ஜூன் மாதம் தான் இந்தப் பாலம் திறக்கப்பட்டது.
படப்பை பஜாரில், 690 மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில், 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கியது. மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த மேம்பால சாலைப்பணிகள் முடிந்து, கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது.தற்போது, மேம்பாலத்தின் மீது ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆகும் நிலையில், மேம்பாலத்தின் மீதுள்ள சாலையில், பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
மேம்பாலத்தின் மீதுள்ள சாலையில் சிமென்ட் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.


