வட தமிழ்நாட்டை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி...சென்னையில் மழை தொடரும்

 
rain

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டை ஒட்டி நிலவுவதால் சென்னையில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மழை தொடரும் எனவும் தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதனிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, செங்கல்பட்டு, இருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.