வாரத்தின் முதல் நாளில் குறைந்த தங்கம் விலை..

 
gold

சென்னையின் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

செசென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. அந்தவகையில் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,440க்கும்,  அதேபோல் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 5,555க்கும் விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 1.50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையானது. 

gold

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றம் இன்றி விற்பனையானது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான என்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,545க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.