மழை தொடரும்... கரையை கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், “கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம். சில மணிநேரங்களில் முற்றிலுமாக கரையைக் கடந்துவிடும். சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை கடந்து செல்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.
அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


