சமையல் கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய நடுத்தட்டு மக்களுக்கான தீபாவளி பரிசு - பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை!!

 
peter

சமையல் கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய நடுத்தட்டு மக்களுக்கான தீபாவளி பரிசு என்று  பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5.26 குறைந்து  ரூ.101.40 க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு  ரூ.11.16 குறைந்து  ரூ.91.43 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ttn

அதேசமயம் சமையல் சிலிண்டர் விலையும் மாதந்தோறும்  உயர்ந்து வருகிறது. நவம்பர் மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268 அதிகரித்துள்ளது. இதன் மூலம்  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2,133-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர்  ரூ. 915.50க்கு விற்பனையாகி வருகிறது. 


இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலையினை குறைத்த ஒன்றிய அரசு சமையல்கேஸ் விலையினையும் குறைக்கவேண்டும்.குடும்ப உபயோக சிலிண்டர் ₹916,  டீஸ்டால் சிலிண்டர் ₹2133.
தீபாவளிக்குபின்னர் விலைகூட்டப்படும் என்ற தகவல் உண்மையாகிவிடக்கூடாது.சமையல்கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய,நடுத்தட்டு மக்களுக்கான தீபாவளிபரிசு! என்று  குறிப்பிட்டுள்ளார்.