குறைந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.

gold

செப்டம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது.

gold

நேற்று சவரனுக்கு ரூபாய் 80  உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20  ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5510 ரூபாயாக விற்பனையாகிறது.  சவரன் 160 குறைந்து ஒரு சவரன் 44 ஆயிரத்து 80 ரூபாயாக விற்பனையாகிறது.

gold

வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாயாகவும்,  ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.