தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை - ஆடியோ ஆதாரம் உள்ளதாக அமைச்சர் தகவல்!!

 
ma subramanian

குழந்தைகள் நல ஆணைய உறுப்பினருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

rn

சென்னை DPH  வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு, சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான Rapid Immunization skill Enhancement (RISE) செயலி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

masu

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. புதுக்கோட்டையில் 50 மாணவர் சேர்க்கையுடன் பல் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லூரியை இந்தாண்டே முதலமைச்சர் தொடங்கி வைப்பார்" என்று கூறினார்.

tn

தொடர்ந்து பேசியவர் சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடக்கவில்லை என தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளார்.  மருத்துவரிடம் குழந்தைகள்  நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது. இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை எனக் கூறிவிட்டு ஆளுநரை சந்தித்த பின் பரிசோதனை நடந்ததாக கூறினார்" என்றார்.