காதலியை நேற்று கரம்பிடித்த மாதம்பட்டி ரங்கராஜ்.. இன்று 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு..!!
மாதம்பட்டி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், அவரது மனைவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞராக இருந்து வரும் ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பல முக்கியஸ்தர்களின் இல்ல விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் சர்வீஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் என்கிற அளவிற்கு பாப்புலரான நபராகவும் இருந்து வருகிறார்.
இதனிடையே ரங்கராஜுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ருதி என்பவருடம் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அதன்காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேநேரம் ரங்கராஜுக்கும் அவரது ஆடை வடிமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வந்தன. ஜாய் கிரிஸில்டாவின் சமூகவலைதள பதிவுகளும் சந்தேகங்களுக்கு வலுவூட்டும் வகையிலேயே இருந்து வந்தன. இந்த நிலையில், சாய் கிரிஸில்டாவை , மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து சாய் கிரிஸில்டாவின் எக்ஸ் தள பதிவில், “திரு மற்றும் திருமதி ரங்கராஜ்” இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், கிரிஸில்டாவின் நெற்றியில் மாதம்பட்டி ரங்கராஜ் குங்குமம் வைப்பது போன்ற புகைப்படமும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்று மற்றொரு பதிவில் தான் கருவுற்றிருப்பதாகவும், 6வது மாத கர்ப்பகாலத்தில் இருப்பதாகவும் கிரிஸில்டா குறிப்பிட்டுள்ளார். திருமணம் செய்துகொண்டதாக நேற்றைய தினம் தான் அறிவித்திருந்த நிலையில், இன்று 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது.
Baby loading 2025🤰
— Joy Crizildaa (@joy_stylist) July 27, 2025
We are pregnant 🤰
6th month of pregnancy #madhampattyrangaraj #MrandMrsRangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/wA9s87AswJ


