"ஜாய் கிரிசில்டா என்னை ஏமாற்றிவிட்டார்! என் குழந்தையும் பாதிப்பு"- மாதம்பட்டி ரங்கராஜ்

 
ச் ச்

சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிப்பதாகவும், உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுவதாகவும் அவற்றை புறக்கணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்தார்.

Image

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப தடை விதிக்கக் கோரி சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி செந்தில் குமார், சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.அப்போது,ஜாய் கிரிஸ்டிலா தரப்பில் ஆஜராகியிருந்த அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன், அரசியலமைப்பின் கடமையை நீங்கள் செய்கிறீர்கள், சமூக வலைதளங்களில் இவ்வாறு விமர்சிப்பது கண்டனத்திற்குரியது வழக்கறிஞர்கள் சமுதாயம் உங்கள் பின் நிற்கும் என உறுதியளித்தார்.

முதல் மனைவியை வைத்து கேம் விளையாண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ்?.. ஜாய்  கிரிஸில்டா போட்ட குண்டு | First wife Shruthi knows about second marriage  with Madhampatty Rangaraj and Joy ...

இதே வழக்கு விசாரணையின்போது  ஆஜராகியிருந்த மக்களவை உறுப்பினர் சுதாவும் நாடாளுமன்றமும் உங்கள் பின் நிற்கும் என உறுதியளித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், வழக்கறிஞர்கள் சமுதாயம் உங்களுக்கு துணை நிற்கும் என்று குறிப்பிட்டார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில்  கிறிஸ்டில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிடில்டாவின் பேட்டி காரணமாக தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு  உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.