”ஜாய் கிரிஸில்டாவின் உண்மையான நோக்கம் இதுதான்” - மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி

 
ச் ச்

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக ஊடகங்களை தவறாக பயன்படுத்துகிறார் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

என் இறுதி வரை காப்பாற்றுவேன் ...ஆதரவாக இறங்கிய மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி!  - Dinasuvadu

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து அனைத்தையும் வெளிப்படையாக பேசியிருந்தார். இதனால், நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய், தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜாய் என்னை மிரட்டியதால் திருமணம் செய்து கொண்டேன் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக ஊடகங்களை தவறாக பயன்படுத்துகிறார். அவர் அளித்த பேட்டிகளில் எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம், நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை என்று கூறினாலும், பணம் பறிப்பதும், என் குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வதுமே அவரின் உண்மையான நோக்கம். நான் என் கணவருடன் உறுதியாக நிற்கின்றேன், அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.