‘தனியாக பேச வேண்டும்’ ராமதாஸ், அன்புமணி நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்க்டேஷ் உத்தரவிட்டுள்ளார்.
ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளார் முரளி சங்கர் சாபில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மாமல்லபுரத்தில் ஆக்ஸ்ட் 9ம் தேதி அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அன்புமணி பாமக தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் , ஆகையால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இத வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்க்டேஷ் உத்தரவிட்டுள்ளார். இருவரும் மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வந்து சந்திக்கும்படி கூறினார். மேலும், கட்சி நலன் கருதி இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என்றும், இருவருடன் பேசும்போது கட்சிக்காரர்கள் யாரும் உடன் இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆகையால் உடனடியாக ராமதாஸை கிளம்பச் சொல்லுங்கள் இது எனது வேண்டுகோள் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.


